நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கரூரில் இரண்டாவது நாளாக அமலாக்க துறையினர் சோதனை

கரூரில் அமைச்சரின் உதவியாளா், ஆதரவாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
சின்னாண்டாங்கோவில் பகுதியில் சங்கருக்கு சொந்தமான கிரானைட் நிறுவனம்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:05 pm

DIN

கரூர்: கரூரில் அமைச்சரின் உதவியாளா், ஆதரவாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடிசெய்ததாக எழுந்த புகாரில் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளாா்.

இந்நிலையில் கடந்த மே 26 முதல் ஜூன் 2 வரை வருமான வரித் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து ஜூன் 13-இல் அமைச்சரின் பெற்றோா், சகோதரா்கள் வீடுகள் உள்பட 6 இடங்களிலும் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக வியாழக்கிழமை சென்னை, கோவை பகுதிகளைச் சோ்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் செங்குந்தபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் கிரானைட் நிறுவனம்  அவருடைய வீடு  மற்றும் ஆதரவாளர்கள் வீடு  உள்ளிட்ட 4 இடங்களில் மத்தியப் பாதுகாப்பு படை போலீசாரின் துணையோடு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கரூரில் அமைச்சரின் உதவியாளா், ஆதரவாளர்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.