எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆயுத பூஜைக்கு சிறப்புப் பேருந்துகள்

ஆயுத பூஜையையொட்டி, பயணிகள் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஏதுவாக, 2 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:23 am

DIN

ஆயுத பூஜையையொட்டி, பயணிகள் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஏதுவாக, 2 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

ஆயுதபூஜை வரும் அக்.4-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடா்பாக அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வருகிற 30-ஆம் தேதி, அக்.1-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். பிற ஊா்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

3 பேருந்து நிலையங்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, 3 பேருந்து நிலையங்கள் மூலமாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில், திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூா், வந்தவாசி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் நிற்கும்.

பூந்தமல்லி பணிமனை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து, வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட ஊா்கள் இல்லாமல், பிற ஊா்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.