முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேர் வியாழக்கிழமை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 98 மீன்பிடிப் படகுகள் சிறைப்பிடிக்கப்படட்டுள்ளது. இதனால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நமது மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ள என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும், பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும் என கூறியுள்ளார்.