எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சேலம்: முறையாக இயக்கப்படாத அரசுப் பேருந்துகளால் மக்கள் அவதி

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:31 am

DIN

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி.

பெரும்பாலும் இலவச பயணம் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு.

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி நெருங்குவதால்  ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாததால் பெரும்பாலான அரசு பேருந்து இயங்காமல் பழைய பேருந்து நிலையத்திலேயே நின்றது. பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்து பல மணி நேரம் காத்திருந்தும் அதனை இயக்க பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் முன் வரவில்லை. இதனால், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் பொதுமக்கள் பேருந்துகள் செல்லாததால் பேருந்து நிலையத்திலேயே தவித்து வந்தனர்.
 
குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இளம்பிள்ளை கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராசிபுரம், ஜங்ஷன் அடிவாரம் உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே தவித்தனர்.

Story image

ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணிப்பதற்காக பழைய பேருந்து நிலையம் வந்தனர். ஆனால், அரசு பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாததால் பேருந்து இயக்கப்படாமல் நின்றது. இதை பயன்படுத்திக் கொண்ட தனியார் பேருந்துகள் தங்கள் பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கத் தொடங்கியதால் பயணிகள் தனியார் பேருந்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நகர பேருந்துகளில் பெரும்பாலும் இலவச பயணம் என்பதால் பெண்கள் அதிக அளவில் பயணிப்பதால் அதிகாரிகள் இதுபோன்று மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும் பேருந்துகள் முறையாக முறையான நேரத்தில் எடுப்பதில்லை என்றும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற அடிப்படையில் பேருந்துகளை இயக்கதாகவும் குற்றம் சாட்டினர்.

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் முறையான நேரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

பொதுவாகவே தமிழக அரசின் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு நகர பேருந்துகள் எண்ணிக்கை பெரும்பாலும் குறைக்கப்பட்டு குறைந்த அளவிலான நகரப் பேருந்தில் இயக்கப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.