எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:09 am

DIN

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 

இந்நிலையில் இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. தமிழக அரசு சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அதிமுக, திமுக கட்சிகள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.