டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

துபை சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சா்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்  துபை சென்றடைந்தார்.

News image
துபை சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

சா்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்  துபை சென்றடைந்தார்.

துபையில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் துபை புறப்பட்டு சென்றார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு துபை சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய தூதர் வரவேற்றார்.

துபை சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை  வருகிற 25-ஆம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறாா்.

துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் முதல்வர், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்

துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் முதல்வர், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்

தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்படவுள்ளன.

துபையில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. மேலும், புலம்பெயா் தமிழா்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வருடனான வெளிநாட்டுப் பயணத்தில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அவா் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.