புதுச்சேரி: புதுச்சேரியில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் காலை 9.07-க்கு முதலமைச்சர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் சுதந்திர நாளில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
புதுவை முதலைமைச்சர் என். ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், சட்டபேராவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
முதல்வர் தனது உரையில், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்
கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

