பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்குவோம்: அன்புமணி சுதந்திர நாள் வாழ்த்து

மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

News image
அன்புமணி ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:04 am

DIN


மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது சுதந்திர நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த  இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத் தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள் தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் நாம் இல்லை என்பது தான் இந்த மகிழ்ச்சியான நாளில் வருத்தமான உண்மை. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடைந்த நாம், இப்போது போதை, மது, சூது ஆகிய மூன்று அரக்கர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். ஆங்கிலேயர்களை விட இந்த சமூகக் கேடுகள் நம்மை பல மடங்கு கூடுதலாக சுரண்டுகின்றன. ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட உயிர், பொருளாதார இழப்புகளை விட இந்த அரக்கர்களால் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற விடுதலையை போதை, மது, சூது ஆகிய அரக்கர்களிடம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான மனித வாழ்க்கை இந்த சமூகக் கேடுகளால் நரகமாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட  மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும். இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை இந்த நாடும், நாட்டு மக்களும் முழுமையான அனுபவிக்க வேண்டும் என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.