தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா  நடைபெற்றது.

News image
ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிய பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன்.
Updated On :28 ஜனவரி 2024, 4:14 am

DIN



தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா  நடைபெற்றது.

செம்பனார்கோவில் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் இராஜாராமன்,வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், புஷ்பலதா, ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன், மாவட்ட முன்னாள் ஆளுநர் மருத்துவர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு  தலைவர் மதிவாணன் வரவேற்றார்.

இவ்விழாவில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு ஆசிரியர் பணியை பாராட்டி 36 ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.