/

இளையான்குடி, திருப்புவனத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனத்தில் நடந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் திமுக வினய் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

News image
திருப்புவனத்தில் திமுகவினர் பெண்களுக்கு இலவசமாக சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்
Updated On :28 ஜனவரி 2024, 5:34 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனத்தில் நடந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் திமுக வினய் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இளையான்குடியில் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளையான்குடி ரகுமானியா பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இங்குள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டித் துண்டுகள் வழங்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு அங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

இளையான்குடியில் திமுகவினர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கினர்.

இளையான்குடியில் திமுகவினர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளுக்கு  இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார். பேரூர்ச் செயலாளர் நஜூமுதீன், இளைஞரணி அமைப்பாளர் பெரோஸ்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளில் திமுக விவசாய அணி அமைப்பாளர் காளிமுத்து, நெசவாளர் அணி சாரதி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

 திருப்புவனத்தில் 

திருப்புவனத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொற்கோ தலைமையில் திருப்புவனம் புதூர், கோட்டை, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினர். 

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன்,  மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் சின்னையா, திமுக ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகர்ச் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.