இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீபாவளியன்று எந்தந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? வானிலை மையம் விளக்கம்

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:30 am

DIN

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தியில்,

தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டையில் மிக கனமழையும், திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தீபாவளியன்று(நாளை)

நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.