அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராஜீவ்காந்தி படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:16 pm

DIN



ஈரோடு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை மூலப்பட்டறையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாச்சலம், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், திருச்செல்வம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், வின்சென்ட், அரவிந்த் ராஜ், சித்திக்,  கராத்தேயூசப், நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, எஸ் டி பிரிவு மாவட்ட தலைவர் சின்னசாமி, சிறுபான்மை பிரிவு மண்டல தலைவர் முகப்புபாட்சா, சிறுபான்மை துணைத்தலைவர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் வழங்கப்பட்டது. 

இதைப்போல் கருங்கல்பாளையம்  உள்பட பல்வேறு பகுதி மக்களுக்கும் கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது. ஆனூர் தியேட்டர் அருகே செவிலியர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உடைகள், குழந்தைகளுக்கு பவுடர்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.