/

புதுவையில் 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்வு; 600-ஐத் தாண்டியது

புதுவையில் தொடர்ந்து 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு 600-ஐத் தாண்டியுள்ளது.

News image

புதுவையில் 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்வு; 600-ஐத் தாண்டியது

Updated On :9 ஜூன் 2021, 9:58 am

புதுச்சேரி: புதுவையில் தொடர்ந்து 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு 600-ஐத் தாண்டியுள்ளது.

புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு கடந்த திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்த நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 642 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

அதே வேளையில், கரோனாவுக்கு பலியானோர் எணணிக்கை 4 ஆகக் குறைந்துள்ளது. 

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் புதிதாக 642 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,10,748 லட்சமாக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 1,648 ஆக உள்ளது.

மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் என மொத்தம் 6,853 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்து வந்ததால் பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15- ஆம் தேதி 413 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் பிறகு தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. புதிய உச்சமாக மே 11- ஆம் தேதி 2,049 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் 500-ஐ எட்டியிருந்த நிலையில், இன்று 600-ஐத் தாண்டியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.