/

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

பந்துவீச்சைத் தேர்வு செய்தது பற்றி குஜராத் கேப்டன் பேசியிருப்பதாவது...

News image

சிஎஸ்கே, குஜராத் அணியின் கேப்டன்கள். - படம்: ஐபிஎல்

Updated On :26 ஏப்ரல் 2026, 10:13 am

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஷுப்மன் கில் கூறினார்.

இந்தப் போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது பற்றி குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், “கடல்காற்று வீசுவதால் பந்துவீச்சாளர்களுக்கு கவலையில்லை” எனக் கூறியுள்ளார்.

இரு அணிகளுமே 6 புள்ளிகளில் இருந்தாலும் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி ஐந்தாவது இடமும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறாவது இடத்திலும் இருக்கிறது.

சென்னையில் வெய்யில் கொளுத்துகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நாங்கள் பந்துவீசுகிறோம். இது நல்ல ஆடுகளமாக இருக்கிறது. இந்த மாதிரியான ஆடுகளத்தில் அதிக ரன்கள் இலக்காக இருந்தால் நன்றாக இருக்கும். வெயில் பிரச்னை இல்லை. கடல்காற்று நன்றாக வீசுவதால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்குப் பிரச்னை இல்லை. இருப்பினும் நாங்கள் சரியாக செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன.

மூன்று நான்கு ஓவர்களில் ரன்களை கசிய விடுகிறோம். நல்ல லெந்தில் மிடில் ஓவர்களில் பந்துவீச வேண்டும். சிறிய தருணங்களில் வெல்ல வேண்டும். 170-180 ரன்கள் எடுக்கும் ஆடுகளமாக இருந்தால் பவர்பிளேவில் பார்த்து விளையாட வேண்டும் என்றார்.

சிஎஸ்கே அணி 2 ஓவர்களில் 11/0 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் 11 ரன்கள் எடுத்துள்ளார்.

குஜராத்: சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், மானவ் சுதர்.

Summary

No worries about the sea breeze... Shubman Gill on the bowling!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.