திருச்சி: தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் தற்கொலை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 9 மாவட்டங்களில் 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலை வாய்ப்பை இழந்து மன அழுத்தத்துக்குள்ளானோர் தற்கொலை செய்து கொள்வதே, இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கரோனா பொதுமுடக்கம், மனிதர்களின் மனநிலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களால் மனு அழுத்தத்துக்குள்ளான பலரும் அந்த சூழ்நிலையைக் கையாள தெரியாமல் இதுபோன்ற மிக மோசமான முடிவை எடுப்பதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தை வெளியில் சொல்லாமல், மனதுக்குள்ளேயே வைத்துப்பூட்டி, அதன் பாதிப்பு பெரிதாகி, இறுதியில் தற்கொலையில் முடிகிறது.
நாட்டின் முதல் அரையாண்டில், இந்த 9 மாவட்டங்களிலும் இதுவரை 1,300 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக மத்திய மண்டல காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாவட்டங்களில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 326 தற்கொலைகளும், திருச்சியில் 170 தற்கொலைகளும் நடக்கின்றன. அடுத்த இடத்தில் 164 தற்கொலைகளுடன் திருவாரூர் உள்ளது. மயிலாடுதுறையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலுமே 100க்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
திருச்சியில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரி இதுகுறித்துக் கூறுகையில், கடந்த ஆண்டு திருச்சியின் கிராமப் பகுதிகளில் 342 தற்கொலைகள் பதிவானதாகக் கூறுகிறார்.
பெரும்பாலான தற்கொலைகள் குடும்பப் பிரச்னை மற்றும் உடல்நலப் பிரச்னை காரணமாக நடப்பதாகவும் கூறுகிறார்கள்.
கரோனா பொதுமுடக்கம் பொருளாதாரத்தையும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆய்வுகளில், 40 பேரில் 4 பேர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், இது நகரப் பகுதிகளில் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த பொதுமுடக்கக் காலத்தில் சிறார்களிடையேயும் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது. தனிமை, சமூகத்துடனான இணைப்பின்மை, சரியான தூக்கமின்மை போன்றவையும் இதற்குக் காரணங்களாக உள்ளன.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் 104 என்ற சுகாதார அவசர உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது 044- 24640050 உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
2021 ஜூன் 30 வரை தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் பதிவான தற்கொலைகளின் விவரம்..
திருச்சி: 170
புதுக்கோட்டை: 128
கரூர்: 101
பெரம்பலூர்: 115
அரியலூர்: 105
தஞ்சாவூர்: 326 (23 children)
திருவாரூர்: 164
நாகப்பட்டினம்: 123
மயிலாடுதுறை: 72
இவர்களில் 63 பேர் 18 வயதுக்குள்பட்டவர்கள். அவர்களில் (18 ஆண்கள் மற்றும் 45 பெண்கள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


