மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் பலியாகினர், பலர் காயமுற்றனர்.
மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தின் சில பகுதிகளில் குகி-நாகா சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய நபர்களிடையே சமீபகாலமாகத் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் பலியாகியுள்ளனர் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உக்ருல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரு சமூகத்தினரிடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இதில் 3 பேர் பலியாகினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பலியானவர்களில் இருவர் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மூன்றாவது நபர் தங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில் முல்லம் மற்றும் ஷோங்ஃபால் ஆகிய குகி கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குகி மனித உரிமைகள் அறக்கட்டளை கண்டித்துள்ளது.
அதேசமயம், முல்லம் கிராமத்தை தங்குல் நாகா தன்னார்வலர்கள் தாக்கினர் என்ற குற்றச்சாட்டை நாகா கிராமக் காவல் படை மறுத்துள்ளது. ரோந்துப் பணியின் போது குகி ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 29 வயது நாகா தன்னார்வலர் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்தே பதிலடி மோதல் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023-இல் பெரும் கலவரம் வெடித்த நிலையில், இதுவரையிலான வன்முறைச் சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.
சுமாா் ஓராண்டாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்ற மணிப்பூரில் முதல்வா் யும்நாம் கெம்சந்த் தலைமையிலான பாஜக அரசு கடந்த பிப்ரவரியில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
The Naga Village Guard denied attacking Mullam village, saying its personnel were on patrol after attacks on Sinakeithei and Kuki cadre movement under SoO.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை



