/

நெல்லையில் குடியரசு நாள் விழா

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

News image
நெல்லையில் குடியரசு நாள் விழா
Updated On :27 ஜனவரி 2024, 7:23 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

உள்ளாட்சித் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 399 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரூ. 94.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்கர்நகர் திருமலை சிலம்ப பள்ளி கலைஞர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.


படங்கள்- உ.ச.சாய்வெங்கடேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.