தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சுதந்திர தினம்: மானாமதுரை ரயில் பாலத்தில் வெடிகுண்டு சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ரயில் பாலத்தில் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

News image
சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மானாமதுரை வைகை நதி ரயில்வே மேம்பாலத்தில் இருப்புப்பாதை போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

மானாமதுரை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ரயில் பாலத்தில் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மேலும் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி மானாமதுரை இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மானாமதுரை வைகை ரயில் பாலம் பாதுகாப்பு அலுவலில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர்   அதிவீரபாண்டியன் உத்தரவுப்படியும் மதுரை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி மற்றும் காரைக்குடி வட்ட ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர் அறிவுரைப்படியும் மானாமதுரை வைகை நதி ரயில்வே மேம்பாலம், மானாமதுரை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மானாமதுரை இருப்புப்பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  சுகுமார் மற்றும் ராஜேஷ் கண்ணன் தனிப்பிரிவு காவலர்  ராஜ்குமார் உள்ளிட்ட காவலர்கள் குழுக்களாக மெட்டல் டிடெக்டர் மற்றும் புரடர் உடன் வெடிகுண்டு சோதனை செய்தனர்.

மேலும் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மானாமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார  ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.