நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க மக்கள் செய்யும் மோசடி

ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் உடல் வெப்பம் அதிகமாக இருந்து

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:16 pm

ENS


கோவை: ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் உடல் வெப்பம் அதிகமாக இருந்து தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க பலரும் புதிய மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியிருக்கிறது.

கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் நபர்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு வேளை இந்த உடல் வெப்ப பரிசோதனையின் போது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதில் இருந்து தப்பிக்க, பயணிகள் பலரும், பாராசிடமால் மாத்திரைகளை முன்கூட்டியே போட்டுக்கொண்டு உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் யாரும், அரசு வழங்கும் இடத்தில் தங்களை தனிமையில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே சமயம், தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக் கொள்கிறார்கள் என்கிறார்.

கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகவே அரசுகள் இந்த நடவடிக்கையை எடுக்கின்றன. ஆனால், அதில் இருந்து தப்பிக்க இதுபோன்ற முறைகளை மக்கள் யாரும் கையாள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சில பயணிகள் பாராசிடமால் மாத்திரையை சாப்பிட்ட பிறகும், அவர்களுக்கு சராசரியான உடல்வெப்பநிலைதான் இருக்கிறது. அப்படியென்றால், அவர்களது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தது என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. உங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை ஏமாற்றப் போகிறீர்கள் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.