கோடியக்கரை கடலில் விடப்பட்ட அரிய வகை ஆமைக் குஞ்சுகள்!
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் பொரிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி என்ற அரியவகை கடல் ஆமை இனத்தின் 100 குஞ்சுகள் திங்கள்கிழமை கடலில் விடப்பட்டன.


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் பொரிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி என்ற அரியவகை கடல் ஆமை இனத்தின் 100 குஞ்சுகள் திங்கள்கிழமை கடலில் விடப்பட்டன.
இந்த ஆமை இனம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் இனப் பெருக்கத்துக்காக கோடியக்கரை உள்ளிட்ட தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகிறது.
கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள், சுமார் 41 நாள்களுக்குப் பிறகு இயற்கையாக பொரிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும்.
நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூகவிரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு, செயற்கை முறையில் குஞ்சுகளை பொரிக்கச் செய்து கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கோடியக்கரை வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை முறை பொரிப்பகத்தில் நிகழாண்டில், சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து முதல் கட்டமாக 100 ஆமை குஞ்சுகள் திங்கள்கிழமை வெளிவந்தன.
இந்தக் குஞ்சுகள் அனைத்தும் கோடியக்கரை வனச்சரக அலுவலர அயூப்கான் முன்னிலையில் திங்கள்கிழமை காலை கடலில் விடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...