தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மணப்பாறை அருகே ரூ.67 ஆயிரம் ரொக்கம், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

மணப்பாறை அருகே மொபைல் கடை, மளிகைக்கடை, பால் கொள்முதல் மையம் என மூன்று இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

News image
கொள்ளை சம்பவம்
Updated On :27 ஜனவரி 2024, 3:22 pm

எம்.ராஜசேகர்

மணப்பாறை: மணப்பாறை அருகே மொபைல் கடை, மளிகைக்கடை, பால் கொள்முதல் மையம் என மூன்று இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள 10 ஸ்மார்ட் மொபைல்கள், ₹.54 ஆயிரம் ரொக்கம், ₹.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருட்டு போயுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுப்பட்டி அருகே செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் ராஜா என்ற மகேந்திரன். இன்று காலை அவரது கடை பூட்டுகள் உடைத்து இருப்பதாக அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து கடைக்கு வந்த மகேந்திரன், கடையின் உள்ளே பார்த்தபோது அங்கு இருந்த சுமார் ₹.60 ஆயிரம் மதிப்புள்ள 10-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் மொபைல்கள், ₹.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்  மற்றும் ₹.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதேபோல் அருகில் இருந்த நடுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கதவின் பூட்டும் உடைக்க முயற்சி நடந்திருந்தது தெரியவந்து. மேலும் அதே பகுதியில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் தங்கராஜ் என்பவர் வைத்திருந்த மளிகைக்கடை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே தங்கராஜ் பேண்ட் பாக்கட்டில் வைத்திருந்த ₹.13,800 திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமப் பகுதியில் ஒரே நாளில் மூன்று இடங்களில் பூட்டுகள் உடைக்கப்பட்டு நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.