/

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

சென்னையில் நாளையிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ள காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

News image
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு
Updated On :27 ஜனவரி 2024, 6:15 pm

DIN


சென்னை: சென்னையில் நாளையிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ள காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதன்படி, சென்னையிலுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் மதுபான விடுதிகளை டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணியுடன் மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையிலுள்ள அனைத்து உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை என்றும், சென்னை மெரீனா கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து கடற்கரை சாலைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னையிலுள்ள மேம்பாலங்கள் அனைத்தும் நள்ளிரவில் மூடப்படும்.

சென்னை மாநகரத்தில் சுமார் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டக்ஙள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.