தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி, மெளன ஊர்வலம்

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையிலிருந்து தொடங்கிய எம்.ஜிஆர்.நினைவு தின மெளன ஊர்வலம் நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

News image
அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி மற்றும் மெளன ஊர்வலம் .
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

DIN

 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையிலிருந்து தொடங்கிய எம்.ஜிஆர்.நினைவு தின மெளன ஊர்வலம் நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்  33வது எம்.ஜி.ஆர் நினைவு நாள் மெளன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கைகளில் அதிமுக கொடியை ஏந்தி  கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேஜ் அணிந்து பங்கேற்றனர்.

வெள்ளக்கோட்டையில் இருந்து தொடங்கிய இந்த அமைதி ஊர்வலமானது திருச்சுழி ரோடு எம்.எஸ்.கார்ணர் பஜார் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருஉருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். 

இறுதியாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் நினைவுநாள் அமைதி ஊர்வலம் மற்றும் மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.