தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சாத்தான்குளத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் ஒன்றிய நகர அதிமுக சார்பில் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

DIN



சாத்தான்குளம்: சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் ஒன்றிய நகர அதிமுக சார்பில் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, துணைத் தலைவர் அப்பாதுரை, மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் அன்ன கணேசன், செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னதுரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னத் துரை, செயலாளர் பால மேனன், சாத்தான்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பொன் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்பாண்டி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி, முன்னாள் யூனியன் துணைத்தலைவர் ஜெயராணி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைவர் கார்த்தீஸ்வரன்,  கிளைச் செயலாளர் பால்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.