தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கும்மிடிப்பூண்டி பஜாரில் எம்எல்ஏ தலைமையில் ஜெயலலிதா நினைவு  நாள் அனுசரிப்பு

கும்மிடிப்பூண்டி பஜாரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

News image
கும்மிடிப்பூண்டி பஜாரில் எம்எல்ஏ தலைமையில் ஜெயலலிதா நினைவு  நாள் அனுசரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


கும்மிடிப்பூண்டி பஜாரில் எம்எல்ஏ தலைமையில் ஜெயலலிதா நினைவு  நாள் அனுசரிப்பு

கும்மிடிப்பூண்டி பஜாரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நகர செயலாளர் மு.க.சேகர், மாவட்ட பிரதிநிதி தன்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி இமயம் மனோஜ், ஓடை.ராஜேந்திரன், எம்.எஸ்.எஸ்.சரவணன், எஸ்.டி.டி.ரவி,நகர பாசறை செயலாளர் சரவணன்,தீபக் செந்தில், நகர இலக்கிய அணி நிர்வாகி ஏ.மோகன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ  கே.எஸ்.விஜயகுமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். அவரை தொடர்ந்து அதிமுகவினர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் அப்துல் மஜீத்,ஆர்.டி.சீனிவாசன், விஸ்வநாதன், ஜோதி ராமலிங்கம், தீபக், மகளிர் அணி நிர்வாகிகள் பி.சுசிலா, சாந்தி, விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Story image

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால் நாயுடு, மாநில மீனவரணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்  தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அதிமுக கொடி கம்பம் பகுதியில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் ஒன்றுகூடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில்  ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான சேகர், நாகராஜ்,  பிரகாஷ்,  நிஜாம், முருகன், சீனன்,  ஐயப்பன், ஆந்திர மாநில அதிமுக பிரமுகர் ரஞ்சித் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

அதே போல ஆரம்பாக்கம் நொச்சிகுப்பத்தில் ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி ஜெயராமன் தலைமையில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

எகுமதுரையில் ஒன்றிய பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன் தலைமையிலும், பல்லவாடாவில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் தலைமையிலும், கண்ணம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சதீஷ் தலைமையிலும்,புது கும்மிடிப்பூண்டியில் அதிமுக பிரமுகர் சுகுமாறன், ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் தலைமையிலும் ஜெயலலிதா நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.