மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

டிச. 7-ல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகள்

தமிழகத்தில் டிசம்பர் 7-ஆம் தேதிமுதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. 

News image
டிச. 7-ல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகள் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


தமிழகத்தில் டிசம்பர் 7-ஆம் தேதிமுதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் மூடப்பட்டிருந்த உயர்கல்வி நிறுவனங்கள் வரும் 7-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதில், முகக்கவசம் அணிந்தபடியே 50 சதவிகித மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 6 நாள்களுக்கு கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறிகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும். கல்லூரிக்கு அருகேவுள்ள உறவினர்கள் வீட்டில் மாணவர்கள் தங்கிக்கொள்ளலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.