மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஈரோடு ரயில்நிலையத்தில் தயார் நிலையில் கரோனா வார்டு ரயில்

ஈரோடு ரயில்நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தனி ரயில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 6:37 am

ஈரோடு ரயில்நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தனி ரயில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

Story image

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை கரோனா வார்டுகளாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. 

Story image

இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தென்னக ரயில்வே சார்பில் மட்டும் 573 பெட்டிகள் வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Story image

இந்நிலையில் ஈரோடு ரயில்வே பணிமனையில் 20 பெட்டிகள் கொண்ட ரயில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 8 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். இது தவிர மருத்துவர்கள், நர்ஸ்கள், மருந்துகள் வைக்கவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈரோட்டில் உள்ள ரயில் மூலம் 150 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும், எந்த பகுதிக்கும் இந்த ரயிலைக் கொண்டு செல்ல முடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.