தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.
ஒரு மாதத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள தொழில் துவங்க கோரும் அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும்
பெரும் முதலீட்டாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் சிறப்பு அலுவலரை கொண்டு முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு உருவாக்கம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...