/

சென்னையில் பயங்கரவாத தலைவன் கைது: ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

அசதுல்லா ஷேக் (35) என்ற ராஜா சென்னையில் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டான்.

News image

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பயங்கரவாதி அசதுல்லா ஷேக்

Updated On :10 செப்டம்பர் 2019, 8:47 am

மேற்கு வங்க போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வங்கதேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவன் அசதுல்லா ஷேக் (35) என்ற ராஜா சென்னையில் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டான்.

சென்னையில் கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கியிருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷேக் அசதுல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.