விடுதலை செய்ய வேண்டியவர்களை விட்டுவிட்டு கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலவளவில் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய சாதிய கொலைச் சம்பவம் நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்தும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனர்.
பத்து வருட காலமாக தண்டனை அனுபவித்து வந்த இவர்களை எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அ.தி.மு.க, எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார்.
விடுதலை செய்யக் கூடாது என்று தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் 13 பேரையும் விடுதலை செய்ய அரசால் உத்தரவிடப்பட்டு கடந்த 9-ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளிவந்த பரபரப்புக்கிடையில் சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் மூலம் இனி பட்டியல் சமூகத்தினரை சாதி ஆணவத்தால் கொலை செய்துவிட்டு பத்து வருடங்களில் வெளியில் வந்து விடலாம் என்ற எண்ணமே மேலோங்கும்.
இதற்கு அரசே துணைபோகலாமா ? என்ற கேள்வியே எழுந்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எந்த அடிப்படையில் நன்னடத்தை விதிகளை கணக்கிட்டார்கள் என்று தெரியவில்லை. SC/ST (பிரிவு 19 & 20 ) குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சட்டம் பொருந்தாது.
தமிழக மக்கள் பல ஆண்டுகாலமாக 7 பேரின் விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இப்படி எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கொலையாளிகள் முன்கூட்டியே விடுதலையாகியிருப்பது மக்களிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்

வாக்குச்சாவடியில் வாக்காளா்களை இனிப்புடன் வரவேற்ற ‘டினா ரோபோ’

கோவையில் 10 தொகுதிகளிலும் 84.77 சதவீதம் வாக்குப்பதிவு!
ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது: வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


