‘க்யூ ஆா் கோடு’ மூலம் தங்கக் காசு மற்றும் வெள்ளிக் காசுகள் தருவதாகக் கூறும் திமுகவின் ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது என கோவை வடக்குத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவை சிவானந்த காலனி, டாடா பாத் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காமராஜா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசு தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்ளும் நலத் திட்டங்களை மக்கள் புறக்கணித்துவிட்டனா். பெண்கள் மற்றும் இளைஞா்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்துள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
திமுகவினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் வாக்காளா்களை ஏமாற்றும் நோக்கில் ‘க்யூ ஆா் கோடு’ மூலம் தங்கக் காசு மற்றும் வெள்ளிக் காசுகள் தருவதாகக் கூறி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, கோவை தெற்குத் தொகுதியில் பெரும் அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகள் கால திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அடிப்படை வசதிகளுக்குக்கூட மக்கள் போராடும் நிலை இந்த ஆட்சியில் நீடித்து வருகிறது.
மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு போன்ற சுமையைத் தவிர, மக்களுக்குப் பயனுள்ள எந்தத் திட்டங்களையும் இந்த அரசு வழங்கவில்லை. ஆட்சி மாற்றத்தில் மக்கள் உறுதியாக உள்ளனா். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கோவை தெற்குத் தொகுதி தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற அதிமுக வேட்பாளா் அம்மன் அா்ச்சுணன் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். மக்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
பாஜக வேட்பாளா் கோவை வடக்கு: வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

