சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அதிர்ச்சியடையாதீர்கள்.. கொசுப்புழு இருந்ததாக சென்னையில் பாட்டில் குடிநீர் ஆலைக்கு சீல்! அதுமட்டுமில்லை..

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி காணப்பட்டதால், சென்னையில் இயங்கும் குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலையை பூட்டி சீல் வைத்துள்ளது பூந்தமல்லி நகராட்சி ஆணையம்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:58 pm

ENS

சென்னை: டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி காணப்பட்டதால், சென்னையில் இயங்கும் குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலையை பூட்டி சீல் வைத்துள்ளது பூந்தமல்லி நகராட்சி ஆணையம்.

மேலும் குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வழக்கமாக நடைபெறும் ஆய்வுப் பணிகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், பூந்தமல்லி நகராட்சி ஆணையர்  டிடோ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது ஒரு குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலையில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு குடிநீர் பாட்டில்களில் நிரப்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் சிமெண்ட் தொட்டிகளில் நிரப்பப்பட்டிருந்தது. அதில், கொசு முட்டைகளும், கொழுப் புழுவான லார்வாவும் காணப்பட்டதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டும் இதே குடிநீர் பாட்டில் ஆலை இதேக் குற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் அபராதத்தை செலுத்தியிருந்தது. ஆனாலும் அவர்கள் தண்ணீர் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. தொடர்ந்து கொசுப் புழுக்கள் உற்பத்தியாக வழி ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதனால்தான் அந்த ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சரி செய்த பிறகே ஆலையைத் திறக்க அனுமதிக்கப்படும் என்று பூந்தமல்லி நகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லை, அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் குடிநீர் பாட்டில்கள் காலியான பிறகு, அதனை வாங்கி வந்து சுத்தப்படுத்தி, அதில் மீண்டும் தண்ணீரை நிரப்பி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பூந்தமல்லியில் கொசு உற்பத்திக்கு வழி ஏற்படுத்தியதாகக் கூறி அபராதத் தொகையாக ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான டெங்கு பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.