கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தால் நிச்சயம் வெல்வேன்: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

News image
Updated On :25 மார்ச் 2019, 7:24 am

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முதலில் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. 

இந்நிலையில், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:

நான் இரண்டாவது முறையாக சிவகங்கையில் களமிறங்குகிறேன். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் காரணமாக நான் வெற்றி பெறுவது நிச்சயம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வருகிறது. அங்கிருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2 முறையும் ப.சிதம்பரம் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.