சென்னை: கடந்த 2018-ஆம் ஆண்டு போதிய அளவில் மழை பெய்யாததால் தமிழகத்தின் 24 மாவட்டங்களை நீரியல் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிகப் பற்றாக்குறை என்ற அளவில் மழைப் பொழிவைப் பெற்றுள்ளன. அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் நீரியல் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.
அதுபோல மழைப்பொழிவை குறைவாகப் பெற்றுள்ள சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் ஏற்கனவே வறண்டு போய்விட்ட நிலையில் விரைவில் சென்னையை மிக மோசமான குடிநீர் பஞ்சம் விரட்டும் நிலையும் ஏற்படலாம்.
இதில்லாமல் திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளும் நீரியல் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் சந்திந்திருக்கும் மிக மோசமான வறட்சி நிலைக்கு பருவ மழையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது.
பொதுவாக பருவ மழை காலத்தில் ஆண்டுக்கு தமிழகத்தில் 920.9 மி.மீ. மழை பெய்வது வழக்கம். அதாவது குளிர் காலத்தில் 3% மழையும், கோடைக்காலத்தில் 14% மழையும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் 35% மற்றும் 48% மழையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


