மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத் தேர்தல் முடிவுதான் மாநில அரசின் தலையெழுத்தையே தீர்மானிக்க உள்ளது.
சாதாரண இடைத்தேர்தல் தானே என்று நினைத்துவிட முடியாத அளவுக்கு 18 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் பெரும்பான்மை சரிந்திருக்கும் நிலையில் நடைபெறுவதால் இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுவாக கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.
இது 1957 - 62ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 7 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அக்கட்சியே 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2 தொகுதிகளை சுயேச்சைகள் வென்றனர்.
1962 - 67
ஆளுங்கட்சி : காங்கிரஸ்
இடைத் தேர்தல் : 4 தொகுதிகளுக்கு
வெற்றி : 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி
1967-71
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 7 தொகுதிகளுக்கு
வெற்றி : 4 தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி
மூன்றில் எதிர்க்கட்சிகள் வெற்றி
1971-77
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகளுக்கு
ஆளுங்கட்சிக்கு ஒரு தொகுதியும் கிட்டவில்லை.
வெற்றி : 2 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் வெற்றி
1977-1980
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 3 தொகுதிகளுக்கு
வெற்றி : 3 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி
1980-84
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 6 தொகுதிகளுக்கு
வெற்றி : 4 தொகுதிகளில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி
இரண்டில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி
1984-88
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 4 தொகுதிகளுக்கு
வெற்றி : 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி
கூட்டணியான காங்கிரஸ் ஒன்றில் வெற்றி
1989 - 91
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகளுக்கு
வெற்றி : 2 தொகுதிகளில் எதிர்க்கட்சியான அதிமுக வெற்றி
1991 - 96
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 5 தொகுதிகளுக்கு
வெற்றி : 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி
1996 - 2001
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 8 தொகுதிகளுக்கு
வெற்றி : ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 தொகுதிகளில் வெற்றி
தலா ஒன்றில் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி
2001 - 2006
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 8 தொகுதிகளுக்கு
வெற்றி : 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி
ஒன்றில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி
2006 - 2011
ஆளுங்கட்சி : திமுக
இடைத் தேர்தல் : 11 தொகுதிகளுக்கு
வெற்றி : அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கைப்பற்றின.
2011 - 2016
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 6 தொகுதிகளுக்கு
வெற்றி : அனைத்து 6 தொகுதிகளிலும் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்றது.
2016 - 2019
ஆளுங்கட்சி : அதிமுக
இடைத் தேர்தல் : 2 தொகுதிகளுக்கு
வெற்றி : 1 தொகுதியில் ஆளும் அதிமுக வெற்றி
ஒன்றில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி
இந்த புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது பொதுவாக ஆளுங்கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அப்படியே 1971- 77ம் ஆண்டுகளிலும், 1989 - 1991 ஆண்டுகளிலும், இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த சமயத்திலும் இந்த வெற்றிக் கனியைப் பறித்திருப்பது அதிமுகவாகவே இருப்பதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


