டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அறுவை சிகிச்சையில் அலட்சியம்: பெண்ணின் உடலுக்குள் வைத்துத் தைக்கப்பட்ட பஞ்சு

கோவை மாவட்டம் புளியகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர்கள் கவனக் குறைவாக பஞ்சுத் துண்டை வயிற்றில் வைத்துத் தைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2019, 9:44 am


கோவை: கோவை மாவட்டம் புளியகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர்கள் கவனக் குறைவாக பஞ்சுத் துண்டை வயிற்றில் வைத்துத் தைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் கணேசன் (37) என்பவர் அளித்த புகார் மனுவில், 2018ம் ஆண்டு தனது மனைவிக்கு புளியக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் செலவழித்து கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அவரது மனைவி. இதையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் ஸ்கேன் செய்த மருத்துவர்கள், வயிற்றுக்குள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் பஞ்சு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சை எடுத்தனர். தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இது குறித்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று கேட்டபோது, அவர்கள் தன்னை மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி விரட்டியதாகவும் கணேசன் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.