டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

குடத்த தூக்கிட்டு அலயற நமக்கு ஒரு ரயிலுக்கு எவ்வளவு தண்ணி தேவைன்னு தெரியுமா?

சென்னை ரயில் பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய செங்கல்பட்டில் இருந்து 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2019, 10:01 am

சென்னை ரயில் பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய செங்கல்பட்டில் இருந்து 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளிலும் நீர் இல்லாத காரணத்தால், ரயில்களில் நீரை கொண்டு வர தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பேசின் பாலம் பணிமனையின் ரயில் பராமரிப்புப் பணிகளுக்கும், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அன்றாடத் தேவைகளுக்கும், சிறப்பு ரயில் மூலம் 4.5 லட்சம் லிட்டர் நீர் செங்கல்பட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

பேசின் பாலம் அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர், ரயில்களை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 தண்ணீர் டேங்குகள் இருக்கும். ஒவ்வொன்றும் 450 - 600 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவில் இருக்கும். ஒரு ரயில் தனது பயணத்தை முடிக்க 1500 முதல் 2000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒரு ரயிலில் இருக்கும் அனைத்து தண்ணீர் டேங்குகளையும் நிரப்ப 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. 

இருக்கும் தண்ணீருக்கு ஏற்ப டேங்குகளை நிரப்புகிறோம். ஒரு வேளை தண்ணீர் இன்றி டேங்குகளை நிரப்பாமல் விட்டுவிட்டால், அடுத்த ரயில் நிலையங்களுக்கு நீரை நிரப்புமாறு (ஜோலார்பேட்டை -  ஈரோடு அல்லது விழுப்புரம்) அறிவுறுத்திவிடுவோம். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் தண்ணீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறோம்  என்கிறார்கள் அதிகாரிகள்.

தினமும் சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 55 விரைவு ரயில்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 33 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.