துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் என்று பரவலாகக் கேட்டிருப்போம். தற்போது சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு குடும்பத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.
அதாவது தில்லியில் உள்ள மாடன் டவுன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு வீட்டின் வெளிப்புற கேட் திறக்கப்பட்டு, அதில் இருந்து கார் ஒன்று உள்ளே வருகிறது. அந்த காரில் கணவன், மனைவி, குழந்தை என 3 பேர் இருக்கிறார்கள். கணவன் காரில் இருந்து கீழே இறங்கி வெளிக் கதவை மூட வருகிறார். ஆனால், அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சிக் காத்திருக்கிறது. அவர் கதவை மூடுவதற்குள், முகமூடி அணிந்த கொள்ளையர்கள், மூன்று பேர் அவரை உள்ளே தள்ளியவாறு உள்ளே நுழைகிறார்கள்.
அவரை சூழ்ந்து கொண்ட கொள்ளையர்கள் அவரிடம் இருந்து உடமைகளை திருடுகிறார்கள். காருக்குள் இருக்கும் பெண் செல்போனில் யாரையோ அழைக்க முற்படுகிறார். ஆனால் அவளும் குழந்தையும் மற்றொரு கொள்ளையனால் மிரட்டப்பட, ஒரு கொள்ளையன் காருக்குள் ஏதேனும் கிடைக்கிறதா என்று நோட்டமிடுகிறார். சில நிமிடங்களில் அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்துக் கொண்ட முகமூடிக் கொள்ளையர்கள் தப்பி ஓடுகிறார்கள்.
இந்த சிசிடிவி காட்சியில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், சாலையில் தனியாக நடந்து செல்வது மட்டுமல்ல, இரவில் காரில் வீட்டுக்கு வந்தாலும் ஆபத்து நேரிடும் என்பதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


