சென்னை: இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால் போதும்.. சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.
தக்கோலம் முதல் அரக்கோணம் வரையிலான அந்த 9.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்சேவை தொடங்கிவிட்டால் ஒன்றல்ல.. இரண்டல்ல சுமார் 235.5 கி.மீ. தொலைவுக்கு இந்த சுற்றுவட்ட ரயில்பாதை அமையும்.
ஜனவரி 25ம் தேதி இப்புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பிப்ரவரி இறுதியில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டால் ஒருவர் காலையில் சென்னை கடற்கரையில் (0 கி.மீ.) இருந்து பயணத்தைத் தொடங்கினால் அங்கிருந்து தாம்பரம் (28.6 கி.மீ.) வந்து - செங்கல்பட்டு (59.6 கி.மீ.) பிறகு - காஞ்சிபுரம் (95.6 கி.மீ.) அப்படியே - அரக்கோணம் (123.5 கி.மீ.) - திருவள்ளூர் (162.3 கி.மீ.) - நேராக பெரம்பூர் (225.5 கி.மீ.) பிறகு அங்கிருந்து சென்னை கடற்கரை (232.5 கி.மீ.) வரை சென்று திரும்பலாம். முழுக்க முழுக்க ரயில் பாதை மூலம் சென்னையில் கால் வைக்காலேயே அதை சுற்றி வர முடியும்.
தற்போதைக்கு கொல்கத்தாவில்தான் இந்தியாவிலேயே மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதை உள்ளது. அதுவும் வெறும் 35 கி.மீ. அரக்கோணம் - தக்கோலம் ரயில் பாதை இணைந்துவிட்டால் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர்ப் பாதை மாறிவிடும் என்கிறது தெற்கு ரயில்வே.
மேலும் இதன் மூலம் காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஒச்சேரி, திருமால்புர் பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய வசதி ஏற்பட உள்ளது. அதாவது இந்த ரயில் நிலையங்களில் இருந்து அரக்கோணத்துக்கும் ரயில் ஏறலாம். செங்கல்பட்டுக்கும் செல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


