புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சென்னை தி.நகரில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிய பெண் பலி

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிய பெண் பலியானது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

News image
Updated On :28 நவம்பர் 2018, 12:32 pm


சென்னை: சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிய பெண் பலியானது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்று காலை 9.15 மணிக்கு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் வெளியே செல்ல முயன்ற போது, ஒரு பெண் பேருந்தில் ஏற பின்னால் ஓடினார். அந்த நேரத்தில் இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உரசியதில், நடுவில் சிக்கிய பெண் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வள்ளி (48) என்பதும், வேலைக்குச் செல்ல தி.நகர் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் இருந்து இறங்கி மற்றொரு பேருந்தில் ஏற முயன்ற போது விபத்தில் சிக்கி பலியானதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.