ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெயிலை முந்திய புதிய வரலாற்றுச் சாதனையை சாய் சுதர்சன் நிகழ்த்தியுள்ளார். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் (24 வயது) ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2,000 ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடும் சாய் சுதர்சன் 47 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,028 ரன்கள் குவித்துள்ளார். சதம் அடித்து ஆட்டமிழந்து வெளியேறிய சாய் சுதர்சனை அணியின் பயிற்சியாளர் மேத்திவ் ஹைடன் கட்டியணைத்து வாழ்த்தினார்.
இடது கை பேட்டரான சாய் சுதர்சன், அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் போல் அதிரடியாக விளையாடும் வீரராக இல்லாமல் இருந்தாலும், தொடர்ச்சியாக தனது வழக்கமான கிரிக்கெட் பாணியில் விளையாடி கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 205/3 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 206/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்கள் அடித்தவர்கள்
1. சாய் சுதர்சன் - 47 இன்னிங்ஸ்
2. கிறிஸ் கெயில் - 48 இன்னிங்ஸ்
3. ஷான் மார்ஷ் - 52 இன்னிங்ஸ்
4. ருதுராஜ் கெயிக்வார் - 57 இன்னிங்ஸ்
5. கே.எல். ராகுல் - 60 இன்னிங்ஸ்
Summary
Sai sudharsan broke the record of chris gayle in IPL history
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
கதாநாயகனாகும் சாய் அபயங்கர்?

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!

ரூ. 8 கோடி சம்பளம் கேட்கும் சாய் அபயங்கர்?
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


