விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகள் குறைவாகவே புதுச்சேரி விமான நிலையத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது, இந்த விமான நிலையத்தில் 1,500 மீட்டர் நீளத்துக்கான ஓடுதளம் மட்டுமே உள்ளது. இதனை ஏடிஆர்-48, ஏடிஆர்-78, க்யூ-400 போன்ற சிறு விமானங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, இந்த ஓடுதளம் சுமார் 2,500 மீட்டர் வரை இருக்கும் வகையில் அமைத்தால், பெரிய ரக விமானங்கள் எளிதாக வந்து செல்ல முடியும். இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் பயனடைவார்கள்.