ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கிறிஸ்துமஸ் பண்டிகையை மற்றவர்களைவிட அதிக உற்சாகமாகக் கொண்டாடிய தலைவர் இவர்தான்!

கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலயங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம்தான். ஆனால், தற்போது தேவாலயங்களின் அறிவிப்பினால் தமிழகத்தின் மாநிலக் கட்சிக்கும் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 7:07 am


திருச்சி: கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலயங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம்தான். ஆனால், தற்போது தேவாலயங்களின் அறிவிப்பினால் தமிழகத்தின் மாநிலக் கட்சிக்கும் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தேவாலயங்களின் அறிவிப்பினால் ஸ்டாலின் தலைமையேற்றிருக்கும் திமுகவுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சிக் கிடைத்துள்ளது.

அதாவது, அனைத்து தேவாலயங்களின் பிஷப்புகளும் ஒன்றாக ஆலோசனை நடத்தி, வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுத்து அதனை அறிவித்தும் உள்ளனர்.

இதனைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்டியன் நல் எண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், எப்போதுமே திமுக சிறுபான்மையினர் பக்கமே நிற்கும் என்றும், ஏழை மற்றும் சிறுபான்மையினர் பக்கமே கருணாநிதி எப்போதும் நின்றுள்ளார் என்றும் கூறினார்.

சிறுபான்மையினர் பக்கம் திமுக நிற்பதால், பெரும்பான்மை மக்களுக்கு எதிரானக் கட்சியாக மாறிவிடாது. சிறுபான்மையினருக்கு உதவுவது நமது கடமை. ஆனால், பாஜக மக்களைக் குழப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து பாஜகவை தள்ளி வைக்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது. தற்போது இதையேதான் தேசிய அளவில் செய்யப்போகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எனவே, வேறு யாரையும் விட இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைத்தானே?!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.