கரூர்: கனவு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றிருக்கும் தமிழக ஆசிரியர், மீண்டும் ஒரு முறை அந்த விருதுக்கு தான் தகுதியானவரே என்று நிரூபித்துள்ளார்.
ஒரே ஒருவருக்கு உதவி செய்து விடுவதால், உலகமே மாறிவிடாது. ஆனால், உதவி பெற்ற அந்த ஒருவரின் உலகமே மாறிவிடும். இதனை நிரூபித்திருக்கிறார் அந்த ஆசிரியர்.
மகன்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வந்த மூதாட்டி, கஜா புயலால் வீடிழந்து தெருவில் தவித்து வந்தார். அவரை தத்தெடுத்து, புது வாழ்வு அளித்துள்ளார் அந்த கனவு ஆசிரியர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யூனியனைச் சேர்ந்த மருதவனத்தில் ஒரு சிறிய குடிசையையே தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வந்தார் 75 வயது பாக்கியம். 5 மகன்கள் இருந்தும் அனைவரும் கைவிட்ட நிலையில், அக்கம் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தனியாக வசித்து வந்தார்.
டெல்டா பகுதிகளை கருணையே இல்லாமல் தாக்கிய கஜா புயல், மூதாட்டியைக் கைவிட்ட மகன்களை விட மிக மோசமாக நடந்து கொண்டது. ஆம் அவரது குடிசையைப் பந்தாடிச் சென்றது.
ஏற்கனவே வாழ்விழந்து தற்போது வீடிழந்து, செய்வதறியாது இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் தேற்றி தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தனர்.
இந்த பகுதியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்வதில் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பூபதி, இந்த மூதாட்டியைப் பற்றி அறிந்து ஒரு முடிவை எடுத்தார். அதுதான் அவரை தானே தத்தெடுத்து பராமரிப்பது என்று.
உடனடியாக பூபதி தனது மனைவி பிருந்தாவுடன் நேராக மூதாட்டி இருக்கும் பகுதிக்குச் சென்று அவருக்குத் தேவையான ஆடை, சாமான்கள் எல்லாம் கொடுத்து, அவரது வீட்டைக் கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.
தனது கையைப் பிடித்துக் கொண்ட பாக்கியம் அம்மாள், கண்களில் கண்ணீர் தளும்ப பேசினார். எனக்கு 5 பிள்ளைகள் இருந்தும் கைவிட்டுவிட்டன. யார் என்றே தெரியாத தங்கள் உதவி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது அவரிடம் நான் ஒரு உறுதி அளித்தேன். இன்று மட்டுமல்ல, உங்களது இறுதிக் காலம் வரை உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தேன். இனி மாதந்தோறும் அவர் வாழ்வதற்குத் தேவையான பணத்தை அனுப்பிவிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் நான் எனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக எண்ணுகிறேன் என்று பெருமிதத்தோடு கூறினார்.
இதை ஒரு சாதாரண செய்தியாக நினைக்காமல், நமக்கான ஒரு முன்னுதாரணமாக எண்ணினால் இதுபோன்று பலருக்கும் புதிய உலகம் பிறக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
வீடியோக்கள்

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


