புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் மழை, கடல் சீற்றம் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 3.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதுவையில் கடந்த 2 நாள்களாக தீவிர மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3.83 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2 வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகு, பைபர் படகுகள், கட்டுமரங்கள் துறைமுகம் மற்றும் கடற்கரையிலே நிறுத்தப்பட்டுள்ளன.
மழை பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1070,1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது . பேரிடர் பாதிப்பை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

