தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரே ஆண்டில் மூன்று முறை போடப்பட்ட சாலை: நான்கு கேள்விகளுக்கு விடை கிடைத்தால் போதும்

மந்தைவெளியில் ஒரே ஒரு சாலையைப் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறப்போர் இயக்கம் பெற்றுள்ளது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2017, 10:15 am


சென்னை: மந்தைவெளியில் ஒரே ஒரு சாலையைப் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறப்போர் இயக்கம் பெற்றுள்ளது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஒரே ஆண்டில் மூன்று முறை போடப்பட்டதாக கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கணக்கில் ரூ.26 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட தொகை மோசடி என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் இதுதான்.

சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக 2016ம் ஆண்டு மே 30ம் தேதி ரூ.36,97,776 லட்சம் செலவில் சாலை போடப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி ஏற்படுத்த சாலை தோண்டப்பட்டது.

பிறகு சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடங்களில் ஒட்டுப்போடும் பணிக்காக ரூ.2.25 லட்சம் எம்பிகே என்டர்பிரைசஸ் என்ற வேறொரு ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் கேட்கும் கேள்வி என்னவென்றால், சாலை போட்ட ஒப்பந்ததாரரே அந்த பணியை செய்யாதது ஏன்? அல்லது அவருக்கே, ஒட்டுப் போடும் பணியை அளிக்காதது ஏன்? என்பதே.

அடுத்து, இந்த ஒட்டுப் போடும் பணிகள் முடிந்ததும், மீண்டும் அதே சாலையைப் போட்டதாக டிசம்பரில் ரூ.26 லட்சத்துக்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரசீதில் காட்டப்பட்டது போல, டிசம்பரில் சாலை போடப்படவே இல்லை. அது முழுக்க முழுக்க போலி ரசீது என்பது தெரிய வந்துள்ளது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு தற்போது அந்த சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் கூறுவது என்னவென்றால், அந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. ஆனால், அந்த சாலை தற்போதும் 3 ஆண்டுகளுக்கான தர உத்தரவாதக் காலத்துக்குள்தான் இருக்கிறது. அதாவது, இந்த சாலையைப் போட மேற்கொள்ளப்பட்ட முதல் ஒப்பந்தத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து புகார் செய்யவும் அறப்போர் இயக்கம் முடிவு செய்துள்ளது. அடுத்து எங்கள் இலக்கு, ஒப்பந்ததாரர், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இடையிலான தொடர்பு பற்றி வெளிக்கொணர்வதே என்கிறார்கள்.

அறப்போர் இயக்கம் கேட்கும் அந்த நான்கு கேள்விகள் இதுதான்
1. மெட்ரோ வாட்டர் சேவைக்காக சாலையை தோண்ட திட்டமிட்டு ஜூலையிலேயே அச்சாலையை போக்குவரத்துக்கு தடை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.37 லட்சம் செலவில் மே 30ம் தேதி சாலை போட்டது ஏன்?
2. சாலை போட்டு 4 மாத காலத்துக்குள் ஒட்டுப் போடும் பணி வேறொரு ஒப்பந்ததாரர் மூலம் செப்டம்பர் 24ம் தேதி மேற்கொள்ளப்பட்டது ஏன்?
3. சரி மீண்டும் செப்டம்பரில் ஒட்டுப் போடப்பட்டது என்றால், மீண்டும் ரூபாய் 26 லட்சம் செலவில் டிசம்பரில் சாலை போட்டது ஏன்?
4. இதில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியான நிலையில், எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.