சென்னை: கோயில்களில் இலவச தரிசனம் செய்பவர்களுக்கும், சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கும் ஒரே தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகழ்பெற்ற கோயிகளில் சிறப்பு கட்டணம் பெற்று சுவாமி சிலைக்கு அருகில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்குத் தடை விதிக்கக் கோரி அரவிந்த் லோச்சுனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சிறப்பு கட்டணம் செலுத்துவோர் சுவாமி சிலைக்கு அருகில் நின்று நீண்ட நேரம் சுவாமி தரிசனம் செய்வதாகவும், இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால், சிறப்பு தரிசனத்திற்கு தடை விதிக்க வாதிட்டார்.
இதையடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதித்தனர். அதே நேரத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களும், இலவச தரிசனம் செய்யும் பக்தர்களும் ஒரே தூர இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இனி சிறப்பு கட்டணம் செலுத்துபவர்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிட்டதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


