புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ரௌடிகளை வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடாத நிலையில் நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் பதவி விலகினார். இதையடுத்து அத்தொகுதியில் கடந்த 2016 நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதல்வர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் அண்ணா நகரில் உள்ள பிற்பட்டோர் கழக வளாக கீழ்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் புதன்கிழமை திறந்து வைத்தார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். தில்லி பிரதிநிதி ஜான்குமார் பெயர்ப்பலகையை திறந்தார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், இரா. சிவா எம்.எல்.ஏ., முதல்வர் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., திமுக வடக்கு அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. நடந்த கொலைகள் வந்து திட்டமிட்டவை இல்லை. குடும்பத்துக்குள் நேரிட்டது. ரௌடிகளுக்குள் ஏற்பட்டது.
ரௌடிகளை ஒடுக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
ரௌடிகளை புதுவையில் இருந்து வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் பாதுகாப்பாக தான் உள்ளனர். சட்டம் ஒழுங்கை யார் சீர்குலைத்தாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


