எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தூத்துக்குடியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே இன்று காலை மத்திய பாகம் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் 5 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக காரில் இருந்த 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் ஹெராயினை தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 5 கோடி ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.