சமூகவலைத்தளத்தில் இந்த உரையாடல்தான் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது.
கர்நாடகாவில் மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெறுவதால் இந்திய அளவில் இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ட்விட்டரில் ஹிந்தித் திணிப்புக்கு ஆதரவாக அன்சுக் மித்ரா என்கிறவருடைய கருத்துக்கு ஐஸ்வர்யா என்கிற தமிழ்ப் பெண் கொடுத்த பதிலும் அதுதொடர்புடைய விவாதமும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தியரான உங்களிடம் நான் உரையாட ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்று உரையாடலின் நடுவே அன்சுக் கேட்க, அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா, நாம் இருவரும் இப்போது ஆங்கிலத்தில்தானே உரையாடுகிறோம். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று பதிலடி கொடுத்தார்.
உடனே வெகுண்ட அன்சுக், சரி நாம் ஹிந்தியில் உரையாடலாம் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அடுத்ததாக, சொல்லுங்கள் நான் சொல்லவேண்டும் என்று ஹிந்தியில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஐஸ்வர்யா நக்கலாக... ஐ திங்க் திஸ் ஃபெலோ டஸ்ன்ட் அண்டர்ஸ்டாண்ட் தட் ஹி ஹேஸ் ஜஸ்ட் பீன் ட்றோல்ட். அடப்பாவமே! :) என்று பதிலளித்தது சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



இதனால் ஐஸ்வர்யாவுக்கு இரு நாள்களில் 800க்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் கிடைத்துள்ளார்கள். கடைசியில் அவரே, நீங்கள் எல்லோரும் நினைப்பதுபோல நான் போராளி கிடையாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஏதோ என் செல்லப் பெட்டியும் வரதுக்குட்டியும் என்று ட்வீட் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.
இந்நிலையில் இந்த சுவாரசியமான உரையாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப், இது மிகவும் நகைச்சுவையான உரையாடல் என்று ட்வீட் செய்துள்ளார். கயிஃப், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம்: வைகோ கண்டனம்

டிசி படப்பிடிப்பு நிறைவு!

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


